Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1320

அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தனதன தனத்தத் தாத்ததனன தனதன தனத்தத் தாத்ததனன தனதன தனத்தத் தாத்ததனதான

Lyrics

அழகு தவழ்குழல் விரித்துக் காட்டிவிழிகள் கடையிணை புரட்டிக் காட்டிஅணிபொ னணிகுழை புரித்துக் காட்டியநுராக

அவச இதமொழி படித்துக் காட்டிஅதர மழிதுவர் வெளுப்பைக் காட்டிஅமர்செய் நகநுதி யழுத்தைக் காட்டியணியாரம்

ஒழுகு மிருதன மசைத்துக் காட்டிஎழுத வரியிடை வளைத்துக் காட்டிஉ லவு முடைதனை நெகிழ்த்திக் காட்டியுறவாடி

உ ருகு கடிதட மொளித்துக் காட்டிஉ பய பரிபுர பதத்தைக் காட்டிஉ யிரை விலைகொளு மவர்க்குத் தேட்டமொழிவேனோ

முழுகு மருமறை முகத்துப் பாட்டிகொழுநர் குடுமியை யறுத்துப் போட்டமுதல்வ குகைபடு திருப்பொற் கோட்டுமுனிநாடா

முடுகு முதலையை வரித்துக் கோட்டிஅடியர் தொழமக வழைத்துக் கூட்டிமுறைசெய் தமிழினை விரித்துக் கேட்டமுதுநீதர்

பழைய கடதட முகத்துக் கோட்டுவழுவை யுரியணி மறைச்சொற் கூட்டுபரமர் பகிரதி சடைக்குட் சூட்டுபரமேசர்

பணிய அருள்சிவ மயத்தைக் காட்டுகுமர குலமலை யுயர்த்திக் காட்டுபரிவொ டணிமயில் நடத்திக் காட்டுபெருமாளே.

All songs →