Song 1319
வார்குழையை யெட்டி வேளினைம ருட்டி
- Sthalam
- பழமுதிர்சோலை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தத்த தானதன தத்ததானதன தத்ததனதான
Lyrics
வார்குழையை யெட்டி வேளினைம ருட்டிமாயநம னுக்குமுறவாகி
மாதவம ழித்து லீலைகள் மிகுத்துமாவடுவை யொத்தவிழிமாதர்
சீருட னழைத்து வாய்கனிவு வைத்துதேனித ழளித்துஅநுபோக
சேர்வைதனை யுற்று மோசம்விளை வித்துசீர்மைகெட வைப்பருறவாமோ
வாரினை யறுத்து மேருவை மறித்துமாகனக மொத்தகுடமாகி
வாரவணை வைத்து மாலளித முற்றுமாலைகளு மொய்த்ததனமாது
தோரணி புயத்தி யோகினி சமர்த்திதோகையுமை பெற்றபுதல்வோனே
சூர்கிளை மடித்து வேல்கர மெடுத்துசோலைமலை யுற்றபெருமாளே.
