Song 1322
மலரணை ததும்ப மேக குழல்முடி சரிந்து வீழ
- Sthalam
- பழமுதிர்சோலை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனந்த தான தனதன தனந்த தானதனதன தனந்த தானதனதான
Lyrics
மலரணை ததும்ப மேக குழல்முடி சரிந்து வீழமணபரிமளங்கள் வேர்வையதனோடே
வழிபட இடங்க ணாட பிறைநுதல் புரண்டு மாழ்கவனைகலை நெகிழ்ந்து போக ....... ; ளநீரின்
முலையிணை ததும்ப நூலின் வகிரிடை சுழன்று வாடமுகமுகமொ டொன்ற பாயலதுனூடே
முதுமயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்க லாடுமுடிவடிவொ டங்கை வேலுமறவேனே
சிலைநுத லிளம்பெண் மோகி சடையழகி யெந்தை பாதிதிகழ்மர கதம்பொன் மேனியுமைபாலா
சிறுநகை புரிந்து சூரர் கிரிகட லெரிந்து போகதிகழயி லெறிந்த ஞானமுருகோனே
கொலைமிக பயின்ற வேடர் மகள்வளி மணந்த தோளகுணவலர் கடம்ப மாலையணிமார்பா
கொடிமின லடைந்த சோதி மழகதிர் தவழ்ந்த ஞானகுலகிரிமகிழ்ந்து மேவுபெருமாளே.
