Song 131
கரியிணை கோடெனத் தனமசைத் தாடிநற்
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனத் தானனத் தனதனத் தானனத்தனதனத் தானனத்தனதான
Lyrics
கரியிணை கோடெனத் தனமசைத் தாடிநற்கயல்விழிப் பார்வையிற்பொருள்பேசிக்
கலையிழுத் தேகுலுக் கெனநகைத் தேமயற்கலதியிட் டேயழைத்தணையூடே
செருமிவித் தாரசிற் றிடைதுடித் தாடமற்றிறமளித் தேபொருட்பறிமாதர்
செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்சிவபதபத் தேபதித்தருள்வாயே
திரிபுரக் கோலவெற் பழல்கொளச் சீர்நகைச்சிறிதருட் டேவருட்புதல்வோனே
திரைகடற் கோவெனக் குவடுகட் டூள்படத்திருடர்கெட் டோ டவிட்டிடும்வேலா
பரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற்படியினிட் டேகுரக்கினமாடும்
பழநியிற் சீருறப் புகழ்குறப் பாவையைப்பரிவுறச் சேர்மணப்பெருமாளே.
