Song 132
கருகி யகன்று வரிசெறி கண்கள்
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தந்த தனதன தந்ததனதன தந்ததனதான
Lyrics
கருகி யகன்று வரிசெறி கண்கள்கயல்நிக ரென்றுதுதிபேசிக்
கலைசுரு ளொன்று மிடைபடு கின்றகடிவிட முண்டுபலநாளும்
விரகுறு சண்ட வினையுடல் கொண்டுவிதிவழி நின்றுதளராதே
விரைகமழ் தொங்கல் மருவிய துங்கவிதபத மென்றுபெறுவேனோ
முருக கடம்ப குறமகள் பங்கமுறையென அண்டர்முறைபேச
முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்சமுரணசுர் வென்றவடிவேலா
பரிமள இன்ப மரகத துங்கபகடித வென்றிமயில்வீரா
பறிதலை குண்டர் கழுநிரை கண்டுபழநிய மர்ந்தபெருமாளே.
