Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 130

கரிய மேகம தோஇரு ளோகுழல்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனத தானன தானன தானனதனனத தானன தானன தானனதனனத தானன தானன தானனதனதான

Lyrics

கரிய மேகம தோஇரு ளோகுழல்அரிய பூரண மாமதி யோமுகம்கணைகொ லோஅயில் வேலது வோவிழியிதழ்பாகோ

கமுகு தானிக ரோவளை யோகளம்அரிய மாமல ரோதுளி ரோகரம்கனக மேரது வோகுட மோமுலைமொழிதேனோ

கருணை மால்துயி லாலிலை யோவயிறிடைய தீரொரு நூலது வோவெனகனக மாமயில் போல்மட வாருடன்மிகநாடி

கசட னாய்வய தாயொரு நூறுசெல்வதனின் மேலென தாவியை நீயிருகமல மீதினி லேவர வேயருள்புரிவாயே

திரிபு ராதிகள் நீறெழ வேமிகமதனை யேவிழி யால்விழ வேசெயும்சிவசொ ரூபம கேசுர னீடியதனயோனே

சினம தாய்வரு சூரர்கள் வேரறஅமரர் வானவர் வாடிடு தேவர்கள்சிறைகள் மீளவு மேவடி வேல்விடுமுருகோனே

பரிவு சேர்கம லாலய சீதனமருவு வார்திரு மாலரி நாரணர்பழைய மாயவர் மாதவ னார்திருமருகோனே

பனக மாமணி தேவிக்ரு பாகரிகுமர னேபதி னாலுல கோர்புகழ்பழநி மாமலை மீதினி லேயுறைபெருமாளே.

All songs →