Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1277

வரிவிழி பூச லாட இருகுழை யூச லாட

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தான தான, தனதன தான தானதனதன தான தானதனதான

Lyrics

வரிவிழி பூச லாட இருகுழை யூச லாடவளர்முலை தானு மாடவளையாட

மணிவட மாலை யாட முருகவி ழோதி யாடமதுரமு தூறி வீழஅநுராகம்

இருவரு மேக போக மொருவர்த மாக மாகஇதமொடு கூடி மாயைபடுபோதும்

இருகர மாறு மாறு மறுமுக நீப மார்புமிருகழல் தானு நானுமறவேனே

திருநட மாடு காளி பயிரவி மோடி சூலிதிரிபுர நீற தாகஅனல்மோதுஞ்

சிவைகயி லாச வாசி மலைமகள் நாரிபாரிதிருமுலை யாயி தாயியருள்பாலா

குருபர நாத னாகி யரனொரு காதி லோதுகுணநிதி யாசை நேசமுருகோனே

குறமக ளார பார முகிழ்முலை மீது தாதுகுலவிய மாலை மேவுபெருமாளே.

All songs →