Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1276

வரிபரந் திரண்டு நயனமுஞ் சிவந்து

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனந் தனந்த தனதனந் தனந்ததனதனந் தனந்ததனதான

Lyrics

வரிபரந் திரண்டு நயனமுஞ் சிவந்துவதனமண் டலங்கள்குறுவேர்வாய்

மணிசிலம் பலம்ப அளகமுங் குலைந்துவசமழிந் திழிந்துமயல்கூர

இருதனங் குலுங்க இடைதுவண் டனுங்கஇனியதொண் டையுண்டுமடவார்தோள்

இதமுடன் புணர்ந்து மதிமயங் கினும்பொனிலகுநின் பதங்கள்மறவேனே

விரிபரந் தியங்கு முததியுங் கலங்கவிடமினும் பிறந்ததெனவானோர்

வெருவிநெஞ் சமஞ்சி யுரனொடுந் தயங்கிவிரைபதம் பணிந்துமுறையோவென்

றுரைமறந் துணங்க அயில்தொடும் ப்ரசண்டஉ யர்தலங் குலுங்கவருதோகை

ஒருபெருஞ் சிகண்டி மயிலமர்ந் திலங்கிஉ லகமும் புரந்தபெருமாளே.

All songs →