Song 1275
மூலா நிலமதின் மேலே மனதுறு
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- பந்து வராளி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதிதானா தனதன தானா தனதனதானா தனதனதனதான
Lyrics
மூலா நிலமதின் மேலே மனதுறுமோகா டவிசுடர்தனைநாடி
மோனா நிலைதனை நானா வகையிலுமோதா நெறிமுறைமுதல்கூறும்
லீலா விதமுன தாலே கதிபெறநேமா ரகசியவுபதேசம்
நநடு ழிதனிலை வாடா மணியொளிநீதா பலமதுதருவாயே
நாலா ருசியமு தாலே திருமறைநாலா யதுசெபமணிமாலை
நாடாய் தவரிடர் கேடா வரிகரிநாரா யணர்திருமருகோனே
சூலா திபர்சிவ ஞானார் யமனுதைகாலார் தரவருகுருநாதா
தோதீ திகுதிகு தீதீ செகசெகசோதீ நடமிடுபெருமாளே.
