Song 1278
விழையுமனி தரையுமுநி வரையுமவ ருயிர் துணிய
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- ஆனந்த பைரவி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - சதுஸ்ர மட்யம் - கண்டநடை (25)தனதனன தனதனன தனதனன தனதனனதத்தத் தனந்தனம் தத்தத் தனந்தனம்தந்ததான
Lyrics
விழையுமனி தரையுமுநி வரையுமவ ருயிர் துணியவெட்டிப் பிளந்துளம் பிட்டுப் பறிந்திடுஞ்செங்கண்வேலும்
விரையளக முகிலுமிள நகையும்ருக மதகனவிசித்ரத் தனங்களுந் தித்தித்த தொண்டையும்புண்டாணகச்
சுழிமடுவு மிடையுமழ கியமகளிர் தருகலவிசுட்டித் திரிந்திஙன் தட்டுப் படுங்கொடும்பங்கவாழ்வுந்
தொலைவில்பிற வியுமகல வொருமவுன பரமசுகசுத்தப் பெரும்பதஞ் சித்திக்க அன்புடன்சிந்தியாதோ
எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடையிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந்துங்கநீள்பன்
னிருகருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும்ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ்செம்பொனூலும்
மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையுமுத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ்செங்கைவேலும்
முழுதுமழ கியகுமர கிரிகுமரியுடனுருகுமுக்கட் சிவன்பெருஞ் சற்புத்ர வும்பர்தந்தம்பிரானே.
