Song 1271
மனநூறு கோடி துன்ப நொடிமீதி லேநி னைந்து
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதான தான தந்த தனதான தான தந்ததனதான தான தந்ததனதான
Lyrics
மனநூறு கோடி துன்ப நொடிமீதி லேநி னைந்துமதனூட லேமு யங்கியதீருப
மடமாத ராசை கொண்டு புவிமீதி லேம யங்கிமதிசீரெ லாம ழிந்துகொடிதான
விநன்முடி யேதி ரிந்து புவிமீதி லேயு ழன்றுவிரகான்மெ யேத ளர்ந்துவிடுநாளில்
விசையான தோகை துங்க மயிலேறி யோடி வந்துவெளிஞான வீடு தந்துஅருள்வாயே
தினைவேடர் காவல் தங்கு மலைகாடெ லாமு ழன்றுசிறுபேதை கால்ப ணிந்தகுமரேசா
திரையாழி சேது கண்டு பொருராவ ணேசை வென்றதிருமால்மு ராரிதங்கையருள்பாலா
முனிவோர்கள் தேவ ரும்பர் சிறையாக வேவ ளைந்தமதுசூரர் தானை தங்கள்கிளையோடு
முடிகோடி தூளெ ழுந்து கழுகோடு பாற ருந்தமுனைவேலி னாலெ றிந்தபெருமாளே.
