Song 1272
மாதர்மயல் தனிற்கலந்து காமபனி யெனப்புகுந்து
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தனத்ததந்த, தானதன தனத்ததந்ததானதன தனத்ததந்ததனதான
Lyrics
மாதர்மயல் தனிற்கலந்து காமபனி யெனப்புகுந்துமாடவிய லெனச்சுழன்றுகருவூறி
மாறிபல வெனச்சுமந்து தேனுகுட மெனத்திரண்டுமாதமிது வெனத்தளர்ந்துவெளியாகி
வேதபுவி தனிற்கழன்று ஏனமென வெனத்தவழ்ந்துவீறுமணி களைப்புனைந்துநடைமேலாய்
வேணவித மெனத்திரிந்து நாறுபுழு குடற்றிமிர்ந்துவேசிவலை தனிற்கலந்துமடிவேனோ
ஆதிசர ணெனக்கயங்கு லாவமுத லையைக்கிடங்கிலாரவுடல் தனைப்பிளந்தஅரிநேமி
ஆமைகய லெனச்செயங்கொள் கோலகுற ளரித்தடங்கையானஅர வணைச்சயந்தன்மருகோனே
சோதியுரு வெனத்திரண்டு கோலஅரு ணையிற்கலந்தசோமனணி குடிற்சிலம்பனருள்பாலா
தோகைமயி லெனச்சிறந்த ரூபிகுற மகட்கிரங்கிதோள்களிறு கிடப்புணர்ந்தபெருமாளே.
