Song 1270
மலந்தோற் சலந்தேற் றெலும்பாற் கலந்தீட்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்தனந்தாத் தனத்தம்தனதான
Lyrics
மலந்தோற் சலந்தேற் றெலும்பாற் கலந்தீட்டிடுங்கூட் டினிற்றங்கிடுமாய
மயங்காத் தியங்காப் பயங்கோட் டிடுங்காற்றுடன்போக் குறத்தந்தையுமாதும்
குலந்தாய்க் குடம்பாற் பிறந்தேற் றிடுங்கோத்தடங்கூப் பிடத்தம்புவியாவும்
குலைந்தார்ப் பெழுங்காட் டிலந்தாட் களன்பாற்குணங்காத் துனைக்கும்பிடஆளாய்
தலந்தாட் டொடண்டாத் தளைந்தார்க் கிளங்காத்தடந்தாட் புடைத்தன்பினர்வாழத்
தருங்கூத் தரும்பார்த் துகந்தேத் திடஞ்சாத்திரஞ்சாற் றிநிற்கும்பெருவாழ்வே
அலைந்தாற் றெழுங்கோச் சலந்தீக் கலந்தாட்டரம்போச் செனக்கன்றிடும்வேலா
அறங்காத் துறங்காத் திறம்பார்த் திருந்தோர்க்கயர்ந்தோர்க் களிக்கும்பெருமாளே.
