Song 1259
பரிமள மலரடுத் தகில்மண முழுகிமைப்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனதனத் தனதன தனதனத்தனதன தனதனத்தனதான
Lyrics
பரிமள மலரடுத் தகில்மண முழுகிமைப்பரவிய ம்ருகமதக்குழல்மானார்
பருமணி வயிரமுத் திலகிய குழையினிற்படைபொரு வனவிழிக்கயலாலே
எரியுறு மெழுகெனத் தனிமன மடையநெக்கினமையோ டுருகவிட்டவமேயான்
இருவினை நலியமெய்த் திறலுட னறிவுகெட்டிடர்படு வதுகெடுத்தருள்வாயே
சொரிமத அருவிவிட் டொழுகிய புகர்முகத்தொளைபடு கரமலைக்கிளையோனே
துடியிடை யொருகுறக் குலமயில் புளகிதத்துணைமுலை தழுவுபொற்புயவீரா
அரியன பலவிதத் தொடுதிமி லையுமுடுக்கையுமொகு மொகுவெனச்சதகோடி
அலகையு முடனடித் திடவடி யயிலெடுத்தமர்செயு மறுமுகப்பெருமாளே.
