Song 1258
நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டி
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்ததானாந்த தானந் தாத்ததனதான
Lyrics
நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டிநாமேந்து பாலங் காட்டியபிராம
நானாங்க ராகங் காட்டி நாகேந்த்ர நீலங் காட்டிநாயேன்ப்ர காசங் காட்டிமடலுர
மேகாங்க கேசங் காட்டி வாயாம்பல் வாசங் காட்டிமீதூர்ந்த போகங் காட்டியுயிணர்வார்
மேல்வீழ்ந்து தோயுந் தூர்த்தன் மோகாந்த காரந் தீர்க்கவேதாந்த தீபங் காட்டியருள்வாயே
ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றியேடார்ந்த நீபம் போற்றிமுகில்தாவி
ஏறோங்க லேழுஞ் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றியார்வேண்டி னாலுங் கேட்டபொருளீயும்
த்யாகாங்க சீலம் போற்றி வாயோந்தி டாதன் றார்த்துதேசாங்க சூரன் தோற்கமயிலேறிச்
சேவேந்தி தேசம் பார்க்க வேலேந்தி மீனம் பூத்ததேவேந்த்ர லோகங் காத்தபெருமாளே.
