Song 1257
நற்குணமு ளார்த மைப்பொல் மைக்குழலி லேசி றக்க
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்ததன தான தத்த, தத்ததன தான தத்ததத்ததன தான தத்ததனதான
Lyrics
நற்குணமு ளார்த மைப்பொல் மைக்குழலி லேசி றக்கநற்பரிம ளாதி துற்றமலர்சூடி
நச்சுவிழி யால்ம யக்கி யிச்சைபல பேசி யுற்றுநற்பொருள வாம னத்தர்வசமாகி
வெற்பனைய மாத னத்தை பொற்புறவு றாவ ணைத்துமெத்தமய லாகி நித்தமெலியாதே
வெட்சிகமழ் நீப புஷ்ப வெற்றிசிறு பாத பத்மமெய்க்கிருபை நீய ளிப்பதொருநாளே
ரத்தினப ணாதி ருத்தன் மெய்ச்சுதனு நாடு மிக்கலக்ஷணகு மார சுப்ரமணியோனே
நற்றிசையு மேறி யிட்ட பொய்ச்சமணை வேர றுத்துநற்றிருநி றேப தப்பிவிளையாடும்
சற்சனகு மார வ்ருத்தி அற்புதசி வாய னுக்கொர்சற்குருவி நோத சித்ரமயில்வீரா
சக்ரதரன் மார்ப கத்தி லுக்ரமுட னேத ரித்தசத்தியடை யாள மிட்டபெருமாளே.
