Song 1205
அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தன தான தானன தத்தன தான தானனதத்தன தான தானனதனதான
Lyrics
அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினினக்ரம்வி யோம கோளகைமிசைவாழும்
அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறியனைத்துரு வாய காயமதடைவேகொண்
டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுலகிற்றடு மாறி யேதிரிதருகாலம்
எத்தனை யூழி காலமெ னத்தெரியாது வாழியினிப்பிற வாது நீயருள்புரிவாயே
கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறைகற்புடை மாது தோய்தருமபிராம
கற்புர தூளி லேபன மற்புய பாக சாதனகற்பக லோக தாரணகிரிசால
விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவலவெட்சியு நீப மாலையுமணிவோனே
மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழவிக்ரம வேலை யேவியபெருமாளே.
