Song 1206
அயில்வி லோசனங் குவிய வாசகம்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தானனம் தனன தானனம்தனன தானனம்தனதான
Lyrics
அயில்வி லோசனங் குவிய வாசகம்பதற ஆனனங்குறுவெர்வுற்
றளக பாரமுங் குலைய மேல்விழுந்ததர பானமுண்டியல்மாதர்
சயில பாரகுங் குமப யோதரந்தழுவு மாதரந்தமியேனால்
தவிரொ ணாதுநின் கருணை கூர்தருந்தருண பாதமுந்தரவேணும்
கயிலை யாளியுங் குலிச பாணியுங்கமல யோனியும்புயகேசன்
கணப ணாமுகங் கிழிய மோதுவெங்கருட வாகனந்தனிலேறும்
புயலி லேகரும் பரவ வானிலும்புணரிமீதுனுங்கிரிமீதும்
பொருநி சாசரன் தனது மார்பினும்புதைய வேல்விடும்பெருமாளே.
