Song 1204
அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறி
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தாத்தன தனதன தாத்தனதனதன தாத்தனதனதான
Lyrics
அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறிதழியுமுன் வீட்டுமுனுயர்பாடை
அழகொடு கூட்டூமி னழையுமின் வார்ப்பறையழுகையை மாற்றுமினொதியாமுன்
எடுமினி யாக்கையை யெனஇடு காட்டெரியிடைகொடு போய்த்தமர்சுடுநாளில்
எயினர்கு லோத்தமை யுடன்மயில் மேற்கடிதெனதுயிர் காத்திடவரவேணும்
மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படுமதகரிகூப்பிடவளையூதி
மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றியமகிபதி போற்றிடுமருகோனே
படர்சடை யாத்திகர் பரிவுற ராட்சதர்பரவையி லார்ப்பெழவிடும்வேலாற்
படமுனி யாப்பணி தமனிய நாட்டவர்பதிகுடி யேற்றியபெருமாளே.
