Song 120
இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தந்த தனதனன தந்ததனதனன தந்ததனதான
Lyrics
இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சுமிருவிழியெ னஞ்சுமுகமீதே
இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்புமிலகியக ரும்புமயலாலே
நிலவிலுடல் வெந்து கரியஅல மந்துநெகிழுமுயிர் நொந்துமதவேளால்
நிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்தநினைவொடுமி றந்துபடலாமோ
புலவினைய ளைந்து படுமணிக லந்துபுதுமலர ணிந்தகதிர்வேலா
புழுகெழம ணந்த குறமகள்கு ரும்பைபொரமுகையு டைந்ததொடைமார்பா
பலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்தபருமயில டைந்தகுகவீரா
பணைபணிசி றந்த தரளமணி சிந்துபழநிமலை வந்தபெருமாளே.
