Song 119
இலகிய களபசு கந்த வாடையின்
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனதன தந்த தானனதனதன தனதன தந்த தானனதனதன தனதன தந்த தானனதனதான
Lyrics
இலகிய களபசு கந்த வாடையின்ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெஇலைசுருள் பிளவைய ருந்தி யேயதையிதமாகக்
கலவியி லவரவர் தங்கள் வாய்தனிலிடுபவர் பலபல சிந்தை மாதர்கள்கசனையை விடுவது மெந்த நாளதுபகர்வாயே
சிலைதரு குறவர்ம டந்தை நாயகிதினைவன மதனிலு கந்த நாயகிதிரள்தன மதனில ணைந்த நாயகசிவலோகா
கொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெஅயிலயி லதனையு கந்த நாயககுருபர பழநியி லென்று மேவியபெருமாளே.
