Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 118

இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத்தனதான

Lyrics

இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்திளகிப் புளகித்திடுமாதர்

இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற்றிறுகக் குறுகிக்குழல்சோரத்

தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித்தழுவிக் கடிசுற்றணைமீதே

சருவிச் சருவிக் குனகித் தனகித்தவமற் றுழலக்கடவேனோ

அரிபுத் திரசித் தஜனுக் கருமைக்குரியத் திருமைத்துனவேளே

அடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற்றசுரக் கிளையைப்பொருவோனே

பரிவுற் றரனுக் கருணற் பொருளைப்பயனுற் றறியப்பகர்வோனே

பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்பழநிக் குமரப்பெருமாளே.

All songs →