Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 117

இருகனக மாமேரு வோகளப துங்க

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனன தானான தானதன தந்ததனதனன தானான தானதன தந்ததனதனன தானான தானதன தந்ததனதான

Lyrics

இருகனக மாமேரு வோகளப துங்ககடகடின பாடீர வாரமுத கும்பமிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டுகுவடேயோ

இலகுமல ரேவாளி யாகியஅ நங்கனணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்தஇளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்துதணியாமல்

பெருகியொரு காசேகொ டாதவரை யைந்துதருவைநிக ரேயாக வேயெதிர்பு கழந்துபெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்துநிலைகாணாப்

பிணியினக மேயான பாழுடலை நம்பிஉயிரையவ மாய்நாடி யேபவநி ரம்புபிறவிதனி லேபோக மீளவுமு ழன்றுதிரிவேனோ

கருணையுமை மாதேவி காரணிய நந்தசயனகளி கூராரி சோதரிபு ரந்தகடவுளுடன் வாதாடு காளிமலை மங்கையருள்பாலா

கருடனுடன் வீறான கேதானம்வி ளங்குமதிலினொடு மாமாட மேடைகள்து லங்குகலிசைவரு காவேரி சேவகனொ டன்புபுரிவோனே

பரவையிடை யேபாத காசுரர்வி ழுந்துகதறியிட வேபாக சாதனனு நெஞ்சுபலிதமென வேயேக வேமயிலில் வந்தகுமரேசா

பலமலர்க ளேதூவி யாரணந வின்றுபரவியிமை யோர்சூழ நாடொறுமி சைந்துபழநிமலை மீதோர்ப ராபரனி றைஞ்சுபெருமாளே.

All songs →