Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 116

இரவியென வடவையென ஆலால விடமதென

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனன தனதனன தானான தனதனனதனதனன தனதனன தானான தனதனனதனதனன தனதனன தானான தனதனனதனதான

Lyrics

இரவியென வடவையென ஆலால விடமதெனஉருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வரஇரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயிலதுகூவ

எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணியிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதெனஇகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடுவசைபேச

அரஹரென வநிதைபடு பாடோ த அரிதரிதுஅமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள்அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிகமெலிவானாள்

அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிதுஅடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமையவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசைவருவாயே

நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடுபொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல்நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன்மருகோனே

நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரிகவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனிநிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமையருள்பாலா

பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடிபடஅமரர் துயரகல வேலேவி யமர்பொருதபதுமகர தலமுருக நால்வேத கரரணிகமயில்வீரா

பளிதம்ருக மதகளப சேறார வளருமுலைவநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுரபநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர்பெருமாளே.

All songs →