Song 112
ஆதா ளிகள்புரி கோலா கலவிழி
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானா தனதன தானா தனதனதானா தனதனதனதான
Lyrics
ஆதா ளிகள்புரி கோலா கலவிழியாலே யமுதெனுமொழியாலே
ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடையாலே மணமலிகுழலாலே
சூதா ரிளமுலை யாலே யழகியதோடா ரிருகுழையதனாலே
சோரா மயல்தரு மானா ருறவிடர்சூழா வகையருள்புரிவாயே
போதா ரிருகழல் சூழா ததுதொழில்பூணா தெதிருறமதியாதே
போரா டியஅதி சூரா பொறுபொறுபோகா தெனஅடுதிறலோனே
வேதா வுடனெடு மாலா னவனறியாதா ரருளியகுமரேசா
வீரா புரிவரு கோவே பழநியுள்வேலா இமையவர்பெருமாளே.
