Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 113

ஆல காலமெ னக்கொலை முற்றிய

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தனதனதான

Lyrics

ஆல காலமெ னக்கொலை முற்றியவேல தாமென மிக்கவி ழிக்கடையாலு மோகம்வி ளைத்துவி தத்துடனிளைஞோரை

ஆர வாணைமெ யிட்டும றித்துவிகார மோகமெ ழுப்பிய தற்குறவான பேரைய கப்படு வித்ததிவிதமாகச்

சால மாலைய ளித்தவர் கைப்பொருள்மாள வேசிலு கிட்டும ருட்டியெசாதி பேதம றத்தழு வித்திரிமடமாதர்

தாக போகமொ ழித்துஉனக்கடியானென் வேள்விமு கத்தவ முற்றிருதாளை நாளும்வ ழுத்திநி னைத்திடஅருள்வாயே

வால மாமதி மத்தமெ ருக்கறுகாறு பூளைத ரித்தச டைத்திருவால வாயன ளித்தரு ளற்புதமுருகோனே

மாய மானொட ரக்கரை வெற்றிகொள்வாலி மார்புதொ ளைத்திட விற்கொடுவாளி யேவிய மற்புய னச்சுதன்மருகோனே

நாலு வேதந விற்றுமு றைப்பயில்வீணை நாதனு ரைத்தவ னத்திடைநாடி யோடிகு றத்தித னைக்கொடுவருவோனே

நாளி கேரம்வ ருக்கைப ழுத்துதிர்சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிருஞான பூரண சத்தித ரித்தருள்பெருமாளே.

All songs →