Song 111
அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனா தனதத்த தனதனா தனதத்ததனதனா தனதத்ததனதான
Lyrics
அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டுளறிவுதா னறவைத்துவிலைபேசி
அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தையதிகமா வுதவிக்கைவளையாலே
உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொளுலையிலே மெழுகொத்தமடவாரோ
டுருகியே வருபெற்றி மதனா டகபித்துஒழியுமா றொருமுத்திதரவேணும்
மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்திமயிலனாள் புணர்செச்சைமணிமார்பா
மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்கமயிலிலே றியவுக்ரவடிவேலா
பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்திபரமர்பா லுறைசத்தியெமதாயி
பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்றபழநிமா மலையுற்றபெருமாளே.
