Song 1108
வடிவவேல் தனைவெகுண் டிளைஞரா வியைவளைந்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனா தனதனந் தனதனா தனதனந்தனதனா தனதனந்தனதான
Lyrics
வடிவவேல் தனைவெகுண் டிளைஞரா வியைவளைந்தமர்செய்வாள் விழியர்நெஞ்சினில்மாயம்
வளரமால் தனைமிகுந் தவர்கள்போ லளவிவந்தணுகுமா நிதிகவர்ந்திடுமாதர்
துடியைநே ரிடைதனந் துவளவே துயில்பொருந்தமளிதோய் பவர்வசஞ்சுழலாதே
தொலைவிலா இயல்தெரிந் தவலமா னதுகடந்துனதுதாள் தொழமனந்தருவாயே
படியெலா முடியநின் றருளுமா லுதவுபங்கயனுநான் மறையுமும்பரும்வாழப்
பரவையூ டெழுவிடம் பருகிநீள் பவுரிகொண்டலகையோ டெரிபயின்றெருதேறிக்
கொடியவா ளரவிளம் பிறையினோ டலைசலங்குவளைசேர் சடையர்தந்திருமேனி
குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்குமரனே யமரர்தம்பெருமாளே.
