Song 1107
கரவுசேர் மகளிர்குங் குமபயோ தரதனங்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனா தனதனந் தனதனா தனதனந்தனதனா தனதனந்தனதான
Lyrics
கரவுசேர் மகளிர்குங் குமபயோ தரதனங்களினறா துயில்வதுஞ்சரிபேசுங்
கரசரோ ருகநகம் படவிடாய் தணிவதுங்கமலநா பியின்முயங்கியவாழ்வும்
அரவுபோ லிடைபடிந் திரவெலா முழுகுமின்பநல்மகோ ததிநலம்பெறுமாறும்
அதரபா னமுதமுந் தவிரவே மவுனபஞ்சரமனோ லயசுகந்தருவாயே
பரவுமா யிரமுகங் கொடுதிசா முகதலம்படர்பகீ ரதிவிதம்பெறஆடல்
பயில்பணா வனமுகந் தகுணமா சுணகணம்பனிநிலா வுமிழுமம்புலிதாளி
குரவுகூ விளமரும் பிதழிதா தகிநெடுங்குடிலவே ணியிலணிந்தவராகங்
குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்குமரனே யமரர்தம்பெருமாளே.
