Song 1109
கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்ததன தானான தத்ததன தானானதத்ததன தானானதனதான
Lyrics
கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாயகட்டுவிடு மோர்காலமளவாவே
கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வுகற்புநெறி தான்மாயவுயர்காலன்
இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடியிட்டவிதி யோயாவியிழவாமுன்
எத்தியுனை நாடோ று முத்தமிழி னாலோதஇட்டமினி தோடாரநினைவாயே
துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர்தொக்கில்நெடு மாமார்புதொளையாகத்
தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பாலசுத்ததமி ழார்ஞானமுருகோனே
மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவமத்தமயில் மீதேறிவருநாளை
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழவைத்தபடி மாறாதபெருமாளே.
