Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 11

கனகந்திரள் கின்றபெ ருங்கிரி

Thalam
திஸ்ரத்ருபுடை (7)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதந்தன தந்தன தந்தனதனதந்தன தந்தன தந்தனதனதந்தன தந்தன தந்தனதனதான

Lyrics

கனகந்திரள் கின்றபெ ருங்கிரிதனில்வந்துத கன்தகன் என்றிடுகதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடுகதியோனே

கடமிஞ்சி அநந்தவி தம்புணர்கவளந்தனை உண்டுவ ளர்ந்திடுகரியின்றுணை என்றுபி றந்திடுமுருகோனே

பனகந்துயில் கின்றதி றம்புனைகடல்முன்புக டைந்தப ரம்பரர்படரும்புயல் என்றவர் அன்புகொள்மருகோனே

பலதுன்பம்உழன்றுக லங்கியசிறியன்புலை யன்கொலை யன்புரிபவமின்றுக ழிந்திட வந்தருள்புரிவாயே

அனகன்பெயர் நின்றுரு ளுந்திரிபுரமுந்திரி வென்றிட இன்புடன்அழலுந்தந குந்திறல் கொண்டவர்புதல்வோனே

அடல்வந்துமு ழங்கியி டும்பறைடுடுடுண்டுடு டுண்டுடு டுண்டெனஅதிர்கின்றிட அண்டநெ ரிந்திடவருசூரர்

மனமுந்தழல் சென்றிட அன்றவர்உடலுங்குட லுங்கிழி கொண்டிடமயில்வென்றனில் வந்தரு ளுங்கனபெரியோனே

மதியுங்கதி ருந்தட வும்படிஉயர்கின்றவ னங்கள்பொ ருந்தியவளமொன்றுப ரங்கிரி வந்தருள்பெருமாளே.

All songs →