Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 12

காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தானன தந்தன தந்தனந் தந்தனதானன தந்தன தந்தனந் தந்தனதானன தந்தன தந்தனந் தந்தனதனதான

Lyrics

காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறிவாளிம யங்கம னம்பயந் தந்திருள்கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழுதொருகோடி

காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணையாழியு டன்கட கந்துலங் கும்படிகாமனெ டுஞ்சிலை கொண்டடர்ந் தும்பொருமயலாலே

வாதுபு ரிந்தவர் செங்கைதந் திங்கிதமாகந டந்தவர் பின்திரிந் துந்தனமார்பில ழுந்தஅ ணைந்திடுந் துன்பமதுழலாதே

வாசமி குந்தக டம்பமென் கிண்கிணிமாலைக ரங்கொளும் அன்பர்வந் தன்பொடுவாழநி தம்புனை யும்பதந் தந்துனதருள்தாராய்

போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிரமீதுத டிந்துவி லங்கிடும் புங்கவபோதவ ளஞ்சிவ சங்கரன் கொண்டிடமொழிவோனே

பூகமு டன்திகழ் சங்கினங் கொண்டகி஡ணவம டந்தைபு ரந்தரன் தந்தருள்பூவைக ருங்குற மின்கலந் தங்குபனிருதோளா

தீதக மொன்றினர் வஞ்சகந் துஞ்சியிடாதவர் சங்கரர் தந்ததென் பும்பலசேர்நிரு தன்குலம் அஞ்சமுன் சென்றடுதிறலோனே

சீதள முந்தும ணந்தயங் கும்பொழில்சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதிதேவர்ப ணிந்தெழு தென்பரங் குன்றுறைபெருமாளே.

All songs →