Song 10
கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு
- Sthalam
- திருப்பரங்குன்றம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனதான
Lyrics
கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடுநெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொருகனிக்குள் இன்சுவை அழுதுகும் ஒருசிறுநகையாலே
களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெமனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடுகொடுபோகி
நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுறஅணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொரநகத்த ழுந்திட அமுதிதழ் பருகியமிடறுடே
நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவெனஇசைத்து நன்கொடு மனமது மறுகிடநழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரறஅருள்வாயே
நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவெனஉரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவெனநிறைத்த அண்டமு கடுகிடு கிடுவெனவரைபோலும்
நிவத்த திண்திகழ் நிசிசர ருரமொடுசிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇருநிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதரஅடுதீரா
திறற்க ருங்குழல் உமையவள் அருளுறுபுழைக்கை தண்கட கயமுக மிகவுளசிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும்இளையோனே
சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவியபரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகுதிருப்ப ரங்கிரி தனிலுறை சரவணபெருமாளே.
