Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1086

அகிலநறுஞ் சேறு ம்ருகமதமுந் தோயு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனனந் தான தனதனனந் தானதனதனனந் தானதனதான

Lyrics

அகிலநறுஞ் சேறு ம்ருகமதமுந் தோயுமசலமிரண் டாலுமிடைபோமென்

றடியில்விழுந் தாடு பரிபுரசெஞ் சீரதபயமிடுங் கீதமமையாதே

நகமிசைசென் றாடி வனசரர்சந் தானநவையறநின் றேனல்விளைவாள்தன்

லளிதவிர்சிங் கார தனமுறுசிந் தூரநமசரணென் றோதஅருள்வாயே

பகலிரவுண் டான இருவரும்வண் டாடுபரிமளபங் கேருகனுமாலும்

படிகநெடும் பா கடதடகெம் பீரபணைமுகசெம் பாலமணிமாலை

முகபடசிந் தூர கரியில்வருந் தேவுமுடியஅரன் தேவியுடனாட

முழுதுலகுந் தாவி எழுகடல்மண் டூழிமுடிவினுமஞ் சாதபெருமாளே.

All songs →