Song 1087
கலகமதன் காதுங் கனமலரம் பாலுங்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனனந் தானம் தனதனனந் தானம்தனதனனந் தானம்தனதான
Lyrics
கலகமதன் காதுங் கனமலரம் பாலுங்களிமதுவண் டூதும்பயிலாலும்
கடலலையங் காலுங் கனஇரையொன் றாலும்கலைமதியங் காயும்வெயிலாலும்
இலகியசங் காளும் இனியவளன் பீனும்எனதருமின் தானின்றிளையாதே
இருள்கெடமுன் தானின் றினமணிசெந் தார்தங்கிருதனமுந் தோள்கொண்டணைவாயே
உ லகைவளைந் தோடுந் கதிரவன்விண் பால்நின்றுனதபயங் காவென்றுனைநாட
உ ரவியவெஞ் சூரன் சிரமுடன்வன் தோளும்உ ருவியுடன் போதும்ஒளிவேலா
அலகையுடன் பூதம் பலகவிதம் பாடும்அடைவுடனின் றாடும்பெரியோர்முன்
அறமுமறந் தோயும் அறிவுநிரம் போதென்றழகுடனன் றோதும்பெருமாளே.
