Song 1085
கொலையிலே மெத்த விரகிலே கற்ற
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனா தத்த தனதனா தத்ததனதனா தத்ததனதான
Lyrics
கொலையிலே மெத்த விரகிலே கற்றகுவளையேர் மைக்கண்விழிமானார்
குழையிலே யெய்த்த நடையிலே நெய்த்தகுழலிலே பற்கள்தனிலேமா
முலையிலே யற்ப இடையிலே பத்மமுகநிலா வட்டமதின்மீதே
முதுகிலே பொட்டு நுதலிலே தத்தைமொழியிலே சித்தம்விடலாமோ
கலையனே உ க்ர முருகனே துட்டர்கலகனே மெத்தஇளையோனே
கனகனே பித்தர் புதல்வனே மெச்சுகடவுளே பச்சைமயிலோனே
உ லகனே முத்தி முதல்வனே சித்திஉ டையனே விஷ்ணுமருகோனே
ஒருவனே செச்சை மருவுநேர் சித்ரவுருவனே மிக்கபெருமாளே.
