Song 1084
கருதியே மெத்த விடமெலாம் வைத்த
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனா தத்த தனதனா தத்ததனதனா தத்ததனதான
Lyrics
கருதியே மெத்த விடமெலாம் வைத்தகலகவா ளொத்தவிழிமானார்
கடினபோ கத்த புளகவா ருற்றகளபமார் செப்புமுலைமீதே
உ ருகியான் மெத்த அவசமே வுற்றவுரைகளே செப்பியழியாதுன்
உ பயபா தத்தி னருளையே செப்புமுதயஞா னத்தைஅருள்வாயே
பருவரா லுற்று மடுவின்மீ துற்றபகடுவாய் விட்டமொழியாலே
பரிவினோ டுற்ற திகிரியே விட்டபழயமா யற்குமருகோனே
முருகுலா வுற்ற குழலிவே டிச்சிமுலையின்மே வுற்றக்ருபைவேளே
முருகனே பத்த ரருகனே வெற்புமுரியவேல் தொட்டபெருமாளே.
