Song 1083
குடலிடை தீதுற் றிடையிடை பீறிக்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தானத் தனதன தானத்தனதன தானத்தனதான
Lyrics
குடலிடை தீதுற் றிடையிடை பீறிக்குலவிய தோலத்தியினூடே
குருதியி லேசுக் கிலமது கூடிக்குவலயம் வானப்பொருகாலாய்
உ டலெழு மாயப் பிறவியி லாவித்துறுபிணி நோயுற்றுழலாதே
உ ரையடி யேனுக் கொளிமிகு நீபத்துனதிரு தாளைத்தரவேணும்
கடலிடை சூரப் படைபொடி யாகக்கருதல ரோடப்பொரும்வேலா
கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக்கலைபல தேர்முத்தமிழ்நாடா
சடையினர் நாடப் படர்மலை யோடித்தனிவிளை யாடித்திரிவோனே
தனமட மானைப் பரிவுட னாரத்தழும்வி நோதப்பெருமாளே.
