Song 1067
மைந்த ரினிய தந்தை மனைவி
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்த தனன தந்த தனனதந்த தனனதனதான
Lyrics
மைந்த ரினிய தந்தை மனைவிமண்டி யலறிமதிமாய
வஞ்ச விழிகள் விஞ்சு மறலிவன்கை யதனிலுறுபாசந்
தந்து வளைய புந்தி யறிவுதங்கை குலையஉ யிர்போமுன்
தம்ப முனது செம்பொ னடிகள்தந்து கருணைபுரிவாயே
மந்தி குதிகொ ளந்தண் வரையில்மங்கை மருவுமணவாளா
மண்டு மசுரர் தண்ட முடையஅண்டர் பரவமலைவோனே
இந்து நுதலு மந்த முகமுமென்று மினியமடவார்தம்
இன்பம் விளைய அன்பி னணையுமென்று மிளையபெருமாளே.
