Song 1068
ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்தி
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- மணிரங்கு
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதிதனனா தனத்த தனனா தனத்ததனனா தனத்ததனதான
Lyrics
ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்திஉ யர்கால் கரத்தினுருவாகி
ஒருதாய் வயிற்றி னிடையே யுதித்துஉ ழல்மாய மிக்குவருகாயம்
பழசா யிரைப்பொ டிளையா விருத்தபரிதாப முற்றுமடியாமுன்
பரிவா லுளத்தில் முருகா எனச்சொல்பகர்வாழ் வெனக்குமருள்வாயே
எழுவா னகத்தி லிருநாலு திக்கில்இமையோர் தமக்குமரசாகி
எதிரேறு மத்த மதவார ணத்தில்இனிதேறு கொற்றமுடன்வாழுஞ்
செழுமா மணிப்பொ னகர்பாழ் படுத்துசெழுதீ விளைத்துமதிள்கோலித்
திடமோ டரக்கர் கொடுபோ யடைத்தசிறைமீள விட்டபெருமாளே.
