Song 1066
பணிகள் பணமு மணிகொள் துகில்கள்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனன தனன தனனதனன தனனதனதான
Lyrics
பணிகள் பணமு மணிகொள் துகில்கள்பழைய அடிமையொடுமாதும்
பகரிலொருவர் வருக அரியபயண மதனிலுயிர்போகக்
குணமு மனமு முடைய கிளைஞர்குறுகி விறகிலுடல்போடாக்
கொடுமை யிடுமு னடிமை யடிகள்குளிர மொழிவதருள்வாயே
இணையி லருணை பழநி கிழவஇளைய இறைவமுருகோனே
எயினர் வயினின் முயலு மயிலையிருகை தொழுதுபுணர்மார்பா
அணியொ டமரர் பணிய அசுரர்அடைய மடியவிடும்வேலா
அறிவு முரமு மறமு நிறமுமழகு முடையபெருமாளே.
