Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 105

அணிபட் டணுகித் திணிபட் டமனத்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத்தனதான

Lyrics

அணிபட் டணுகித் திணிபட் டமனத்தவர்விட் டவிழிக்கணையாலும்

அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்தவன்விட் டமலர்க்கணையாலும்

பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்பெறுமக் குணமுற்றுயிர்மாளும்

பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்பெறுதற் கருளைத்தரவேணும்

கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்கனியைக் கணியுற்றிடுவோனே

கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்கருதிச் சிறைவைத்திடுவோனே

பணியப் பணியப் பரமர்ப் பரவப்பரிவுற் றொருசொற்பகர்வோனே

பவளத் தவளக் கனகப் புரிசைப்பழநிக் குமரப்பெருமாளே.

All songs →