Song 104
அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தனதனதன தத்தா தத்தனதனதான
Lyrics
அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடுமறிவிலி வித்தா ரத்தனமவிகார
அகில்கமழ் கத்து ரித்தனி யணைமிசை கைக்கா சுக்களவருள்பவர் நட்பே கொட்புறுமொருபோதன்
பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டியபரமம யச்சோ திச்சிவமயமாநின்
பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகுரவுபயில் நற்றாள் பற்றுவதொருநாளே
புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ்பொடிகொடு புற்பாய் சுற்றிகள்கழுவேறப்
பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கோ தைக்கிடைபுலவரில் நக்கீ ரர்க்குதவியவேளே
இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள்எழுபுவி துய்த்தார் மைத்துனர்மதலாய்வென்
றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினையெழுதிவ னத்தே யெற்றியபெருமாளே.
