Song 103
வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடு
- Sthalam
- திருச்செந்தூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்த தானன தானனதந்த தானன தானனதந்த தானன தானனதனதான
Lyrics
வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடுவின்ப சாகர மோவடுவகிரோமுன்
வெந்து போன புராதன சம்ப ராரி புராரியைவென்ற சாயக மோகருவிளையோகண்
தஞ்ச மோயம தூதுவர் நெஞ்ச மோவெனு மாமதசங்க மாதர் பயோதரமதில்மூழ்கு
சங்கை யோர்விரு கூதள கந்த மாலிகை தோய்தருதண்டை சேர்கழ லீவதுமொருநாளே
பஞ்ச பாதக தாருக தண்ட னீறெழ வானவர்பண்டு போலம ராவதிகுடியேறப்
பங்க யாசனர் கேசவ ரஞ்ச லேயென மால்வரைபங்க நீறெழ வேல்விடுமிளையோனே
செஞ்ச டாடவி மீமிசை கங்கை மாதவி தாதகிதிங்கள் சூடிய நாயகர்பெருவாழ்வே
செண்ப காடவி நீடிய துங்க மாமதிள் சுழ்தருசெந்தில் மாநகர் மேவியபெருமாளே.
