Song 102
வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்
- Sthalam
- திருச்செந்தூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தா தந்தா தந்தா தந்தாதந்தா தந்தத்தனதான
Lyrics
வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்மென்பா கஞ்சொற்குயில்மாலை
மென்கே சந்தா னென்றே கொண்டார்மென்றோ ளொன்றப்பொருள்தேடி
வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்வன்பே துன்பப்படலாமோ
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தாவந்தே யிந்தப்பொழுதாள்வாய்
கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்குன்றாள் கொங்கைக்கினியோனே
குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூரும்போய் மங்கப்பொருகோபா
கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்கன்றே வும்பர்க்கொருநாதா
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்கந்தா செந்திற்பெருமாளே.
