Song 106
அதல விதலமுத லந்தத்த லங்களென
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனதனன தந்தத்த தந்ததனதனன தனதனன தந்தத்த தந்ததனதனன தனதனன தந்தத்த தந்ததனதந்ததான
Lyrics
அதல விதலமுத லந்தத்த லங்களெனஅவனி யெனஅமரர் அண்டத்த கண்டமெனஅகில சலதியென எண்டிக்குள் விண்டுவெனஅங்கிபாநு
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமெனஅறையு மறைஅயனஅ ருந்தத்து வங்களெனஅணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொருசம்ப்ரதாயம்
உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலிருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்விலுணரு மநுபவம னம்பெற்றி டும்படியைவந்துநீமுன்
உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமெனமதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதைநம்புவேனோ
ததத ததததத தந்தத்த தந்ததததிதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதிதகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகுதிந்திதோதி
சகக சககெணக தந்தத்த குங்கெணகடிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடிதகக தகதகக தந்தத்த தந்தககஎன்றுதாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருகஅகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரணதுங்ககாளி
பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகுகவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள்தம்பிரானே.
