Song 1023
விட்ட புழுகுபனி நீர்கத் தூரி
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்த தனதனன தானத் தானதத்த தனதனன தானத் தானதத்த தனதனன தானத் தானத்தனதான
Lyrics
விட்ட புழுகுபனி நீர்கத் தூரிமொய்த்த பரிமளப டீரச் சேறுமிக்க முலையைவிலை கூறிக் காசுக்களவேதான்
மெத்த விரியுமலர் சேர்கற் பூரமெத்தை மிசைகலவி யாசைப் பாடுவிற்கு மகளிர்சுரு ளோலைக் கோலக்குழையோடே
முட்டி யிலகுகுமிழ் தாவிக் காமன்விட்ட பகழிதனை யோடிச் சாடிமொய்க்கு மளியதனை வேலைச் சேலைக்கயல்மீனை
முக்கி யமனையட மீறிச் சீறுமைக்கண் விழிவலையி லேபட் டோ டிமுட்ட வினையன்மரு ளாகிப் போகக்கடவேனோ
செட்டி யெனுமொர்திரு நாமக் காரவெற்றி யயில்தொடுப்ர தாபக் காரதிக்கை யுலகைவல மாகப் போகிக்கணமீளுஞ்
சித்ர குலகலப வாசிக் காரதத்து மகரசல கோபக் காரசெச்சை புனையுமண வாளக் கோலத்திருமார்பா
துட்ட நிருதர்பதி சூறைக் காரசெப்பு மமரர்பதி காவற் காரதுப்பு முகபடக போலத் தானக்களிறுரும்
சொர்க்க கனதளவி நோதக் காரமுத்தி விதரணவு தாரக் காரசுத்த மறவர்மகள் வேளைக் காரப்பெருமாளே.
