Song 1024
ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்கு
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தத்த தானதன தத்ததானதன தத்ததனதான
Lyrics
ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்குமேவதுப ழிக்கும்விழியாலே
ஏதையும ழிக்கு மாதர்தம யக்கிலேமருவி மெத்தமருளாகி
நாடுநகர் மிக்க வீடுதன மக்கள்நாரியர்கள் சுற்றமிவைபேணா
ஞானவுணர் வற்று நானெழுபி றப்பும்நாடிநர கத்தில்விழலாமோ
ஆடுமர வத்தை யோடியுடல் கொத்தியாடுமொரு பச்சைமயில்வீரா
ஆரணமு ரைக்கு மோனகவி டத்தில்ஆருமுய நிற்குமுருகோனே
வேடுவர்பு னத்தில் நீடுமித ணத்தில்மேவியகு றத்திமணவாளா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டிமீளவிடு வித்தபெருமாளே.
