Song 1022
முத்து மணிபணிக ளாரத் தாலு
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்த தனதனன தானத் தானதத்த தனதனன தானத் தானதத்த தனதனன தானத் தானத்தனதான
Lyrics
முத்து மணிபணிக ளாரத் தாலுமொய்த்த மலைமுலைகொ டேவித் தாரமுற்று மிளைஞருயிர் மோகித் தேகப்பொருமாதர்
முற்று மதிமுகமும் வானிற் காருமொத்த குழல்விழியும் வேய்நற் றோளுமுத்தி தகுமெனும்வி னாவிற் பாயற்கிநட்முழ்கிப்
புத்தி கரவடமு லாவிச் சாலமெத்த மிகஅறிவி லாரைத் தேறிபொற்கை புகழ்பெரிய ராகப் பாடிப்புவியூடே
பொய்க்கு ளொழுகியய ராமற் போதுமொய்த்த கமலஇரு தாளைப் பூணபொற்பு மியல்புதுமை யாகப் பாடப்புகல்வாயே
பத்து முடியுமத னோடத் தோளிர்பத்து மிறையவொரு வாளிக் கேசெய்பச்சை முகில்சதுர வேதத் தோடுற்றயனாரும்
பற்ற வரியநட மாடத் தாளில்பத்தி மிகவினிய ஞானப் பாடல்பற்று மரபுநிலை யாகப் பாடித்திரிவோனே
மெத்த அலைகடலும் வாய்விட் டோ டவெற்றி மயில்மிசைகொ டேகிச் சூரர்மெய்க்கு ளுறஇலகு வேலைப் போகைக்கெறிவோனே
வெற்றி மிகுசிலையி னால்மிக் கோர்தம்வித்து விளைபுனமும் வேய்முத் தீனும்வெற்பு முறையுமயில் வேளைக் காரப்பெருமாளே.
