Song 1021
வினைத்திரளுக் கிருப்பெனவித்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்ததனத் தனத்ததனத்தனத்ததனத் தனத்ததனத்தனத்ததனத் தனத்ததனத்தனதான
Lyrics
வினைத்திரளுக் கிருப்பெனவித்தகப்படவிற் சலப்பிலமிட்டிசைக்குமிடற் குடிற்கிடைபுக்கிடுமாய
விளைப்பகுதிப் பயப்பளவுற்றமைத்ததெனக் கருத்தமைவிற்சகப்பொருள்மெய்க் குறப்பருகக்கருதாதே
எனக்கெதிரொப் பிசைப்பவரெத்தளத்துளரெச் சமர்த்தரெனப்புறத்துரையிட் டிகழ்ச்சியினுற்றிளையாதுன்
எழிற்கமலத் திணைக்கழலைத்தமிழ்ச்சுவையிட் டிறப்பறஎய்த்திடக்கருணைத் திறத்தெனைவைத்தருள்வாயே
சினத்தைமிகுத் தனைத்துலகத்திசைக்கருதிக் கடற்பரவித்திடத்தொடதிர்த் தெதிர்த்திடலுற்றிடுசூரன்
சிரத்துடன்மற் புயத்தகலத்தினிற்குருதிக் கடற்பெருகச்சிறப்புமிகத் திறத்தொடுகைத்திடும்வேலா
கனத்தமருப் பினக்கரிநற்கலைத்திரள்கற் புடைக்கிளியுட்கருத்துருகத் தினைக்குளிசைத்திசைபாடி
கனிக்குதலைச் சிறுக்குயிலைக்கதித்தமறக் குலப்பதியிற்களிப்பொடுகைப் பிடித்தமணப்பெருமாளே.
